11 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா : இன்றைய ஆட்டம் நடைபெறுமா?

Corona for 11 cricketers Will today's match take place

ஆஸ்திரேலியாவில், பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில், 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 5-ந்தேதி இத்தொடர் தொடங்கியது. 

பாதுகாப்பை மீறி :

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் பாதுகாப்பான வகையில், இருந்த வண்ணம் விளையாடி வந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு வளையத்தையும் மீறி சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியைச் சேர்ந்த 7 வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், சப்போர்ட் ஸ்டாஃப் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டம்?  :

இன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்- சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. 

சிட்னி தண்டர்ஸ் அணியின் நான்கு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இன்றும் போட்டி நடைபெறுமா? என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

இதனால், தொடர் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this story