டெஸ்ட் மேட்ச் வீரர்களுக்கு கொரோனா? : மீதி 3 நாள் ஆட்டம் நடைபெறுமா?

Corona for Test match players  Will the remaining 3 days of the match take place

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில், நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

அரைமணி நேரம் தாமதம் :

இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த இரண்டாம் நாள் ஆட்டம், வீரர்கள் குழுவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, அரைமணிநேரம் தாமதமாக தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் துணை பணியாளர்கள் குழுவில் இன்று நடைபெற்ற ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இரண்டு பணியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாற்று வீரர்கள் :

எனினும், இன்றைய நாள் ஆட்டம் முடிவடைந்ததும், இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

ஒருவேளை விளையாடும் லெவனில் உள்ள வீரர்களுக்கு தொற்று உறுதியானால், மாற்று வீரர்களைக் கொண்டு மீதமிருக்கும் 3 நாள் ஆட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story