ஏமாறியதை எண்ணி, வருத்தப்படுகிறேன் : கே.எல்.ராகுல்
 

By 
Counting and cheating, sorry KL Rahul


இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கள நிலவரம் :

இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 129 ரன்னும், ரோகித் சர்மா 83 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து இருந்தது. இங்கிலாந்து 245 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 23 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் டாம் சிப்லியையும் (11 ரன்), ஹசீப் அமீதையும் (0 ரன்), முகமது சிராஜ் அவுட் செய்தார்.

3-வது விக்கெட்டான ராய்பர்ன்ஸ்-கேப்டன் ஜோரூட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

மற்றொரு தொடக்க வீரரான பர்ன்ஸ் விக்கெட்டை (49 ரன்) முகமது ‌ஷமி கைப்பற்றினார். ஜோரூட் 48 ரன்னும், பேர்ஸ்டோவ் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

ஏமாற்றம்:

நேற்றைய போட்டிக்கு பிறகு சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கூறியதாவது :

சதம் அடித்த பிறகு, நான் நிலைத்து நின்று ஆடாமல், ரன் குவிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நல்ல நிலையில் இருந்த நான், கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அதை தவற விட்டது வருத்தம் அளிக்கிறது.

இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை உடனடியாக கைப்பற்றுவதே எங்களது இலக்காகும். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்க தனித்தனி திட்டம் வைத்துள்ளோம்' என்றார்.

Share this story