கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மனைவிக்கு, கோர்ட் அதிரடி உத்தரவு..

dhawan2

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தன்னை விட்டு பிரிந்த முகர்ஜி தனது வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் மிரட்டுவதாக கூறி டெல்லி ஐகோர்ட்டில் தவான் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரது தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது வாழ்க்கை சீரழிக்கும் வகையில் மனைவி ஆஷா முகர்ஜி அவதூறாக பேசி மிரட்டி வருகிறார். ஐ.பி.எல். டெல்லி கேபிட்டல்ஸ் அணி உரிமையாளரான தீரஜ் மல்கோத்ராவுக்கு அவதூறான செய்திகளையும் அனுப்பினார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு ஷிகர் தவான் குறித்து அவதூறாக பேச தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தவானுக்கு எதிராக அவதூறாக எதையும் சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது. அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதையும் பேசக்கூடாது என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. 

Share this story