கிரிக்கெட் பரபரப்பு :ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா, இன்று இந்திய அணி; ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

todaym

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 

முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது. 

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும். 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- 

இந்தியா: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி. 

ஆஸ்திரேலியா: 

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா. 

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
*

Share this story