கிரிக்கெட் கெத்து: வைரலாகும் சுப்மன் கில் எழுதிய லிஸ்ட்; சதம் அடிக்கணும்..

By 
gill7

2023 ஆம் ஆண்டுக்காக சுப்மன் கில் தனது கைப்பட எழுதிய பக்கெட் லிஸ்ட் ஒன்று சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் செய்யப்படுகின்றன. புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று, சிறப்புடனும், நோய் நொடியின்றி, துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிலர், இந்த ஆண்டு முதல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு பக்கெட் லிஸ்ட் தயார் செய்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்களைப் போன்று இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில தீர்மானங்களை வைத்திருந்தார்.

அந்த தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து தானே கைப்பட எழுதியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பகிர்ந்த சில மணி நேரங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை பெற்றுள்ளது. அந்த பதிவில், "சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, நான் அதை பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தினேன்.

2023 முடிவடைவதால், இந்த ஆண்டு அனுபவங்கள், சில சிறந்த வேடிக்கைகள் மற்றும் பிற சிறந்த கற்றல்களால் நிறைந்தது. முடிவு இந்த வருடம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றாலும் கூட, எங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து, எங்கள் இலக்குகளை நெருங்கிவிட்டோம் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும்.

பிறக்கும் ஆங்கில புத்தாண்டு அதன் சொந்த சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. 2024 இல் எங்கள் இலக்குகளை நெருங்குவோம் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன்...

அவர் தனது பெரும்பாலான தீர்மானங்களை அடைய முடிந்தாலும், இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கில் பூர்த்தி செய்வதை தவறவிட்டார். 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 8 சதங்களுடன் முதலிடத்திலும், சுப்மன் கில் 7 சதங்களுடன் 7ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுப்மன் கில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் போது கில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய 17 போட்டிகளில் கில் 890 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 129 ரன்கள் அடங்கும். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்ததற்காக வீரருக்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.

Share this story