கிரிக்கெட் சர்க்கார் : கபில்தேவ் சாதனையை முறியடிக்க, அஸ்வின் இன்று தீவிரம்..

By 
Cricket govt Ashwin is serious today to break Kapil Dev's record.

இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் மேட்சை, இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் இறங்குகிறார்கள். 

விராட் கோலிக்கு நெருக்கடி :

கேப்டன் விராட் கோலி சமீபத்தில், ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி விவகாரத்தில், கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியை சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். 

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதமும் அடிக்காத அவர், மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

அறிமுக டெஸ்டிலேயே ஸ்ரேயாஸ் சதம் விளாசி  சாதனை படைத்ததால், மூத்த வீரர் அஜிங்யா ரஹானேவின் இடம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

அஸ்வினும் 8 விக்கெட்டும் :

பந்து வீச்சை பொறுத்தவரை, இந்திய அணி 4 வேகம், ஒரு சுழல் என்று 5 பவுலர்களுடன் களம் காணத் திட்டமிட்டுள்ளது. 

4-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குரின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. 

இந்திய அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில், 2-வது இடத்தில் உள்ள கபில்தேவின் (434 விக்கெட்) சாதனையை முறியடிக்க, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட் தேவைப்படுகிறது. 

இந்த தொடரில், கபில்தேவை அவர் முந்தி விடுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி :

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை, அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், கேப்டன் டீன் எல்கர், வான்டெர் துஸ்சென் ஆகியோரையே மலைபோல் நம்பி உள்ளது. 

ஆனால், தென்ஆப்பிரிக்காவின் பிரதான பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். காஜிசோ ரபடா, நிகிடி, டுவான் ஒலிவியர் மிரட்ட காத்திருக்கிறார்கள். 

சரியான சந்தர்ப்பம் :

உள்ளூரில் தென்ஆப்பிரிக்கா எப்போதும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் அந்த அணியில் தற்போது முன்னணி வீரர்கள் பலர் இல்லை. 2018-ம் ஆண்டில் விளையாடிய போது இருந்த டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அம்லா, மோர்னே மோர்கல், பிலாண்டர், ஸ்டெயின் உள்ளிட்டோர் ஓய்வு பெற்று விட்டனர். இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதைவிட, அங்கு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சரியான சந்தர்ப்பம் அமையாது. 

கடந்த முறை 3 டெஸ்டிலும் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றது. அதனால் நடப்பு தொடரிலும் வெற்றியை தீர்மானிப்பதில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
*

Share this story