கிரிக்கெட் பயணம் : வார்னரின் செண்ட்டிமெண்ட்டான தொப்பியை திருடிய மர்ம நபர்; உருக்கமான நிகழ்வு..

By 
dd44

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கடைசி டெஸ்ட்டை விரைவில் விளையாடவுள்ளார். இந்நிலையில் அவரின் பை ஒன்றை விமான நிலையத்தில் யாரோ திருடியுள்ளனர். அந்த பையில் அவர் தன் குழந்தைகளுக்காக வாங்கிய சில பரிசு பொருட்களும் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அணிந்த ராசியான தொப்பியும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “யாருக்காவது அந்த பைதான் வேண்டுமென்றால், என்னிடம் அதுபோல வேறொரு பை உள்ளது. அதை நீங்கள் எந்த பிரச்சனையும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். தயவு செய்து என்னுடைய பையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this story