கிரிக்கெட் டென்ஷன்: இந்திய நடுவரை கோபமாக திட்டிய ஆஸி. கேப்டன்; தீர்வு என்ன.?
 

By 
rdrd3

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரசிகர்களுக்கு ரன்கள் விருந்தாக அமைந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பையிடல இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிறிய ஆடுகளம் மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், தற்காலிக கேப்டனாக களமிறங்கிய சூர்யகுமார் இந்த முடிவை எடுத்தார்.

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் அரைசதமும், மேத்தீவ் ஷார்ட் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டோனிஸ் 7 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய ஜிஸ் இங்கிலிஷ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ருதுராஜ் பந்துகளையே எதிர்கொள்ளாமல் டக் அவுட்டாக, ஜெய்ஸ்வால் 21 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவும், இசான் கிஷனும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வந்தனர்.

அப்போது , இந்த வீரர்களை சமாளிக்க தொடர்ந்து வைட் லெங்கில் பந்துவீசி முயற்சி செய்தனர். ஆனால், பந்து ஓயிடாக மாறியது. ஆனால், நடுவரின் கவனத்தை திசை திருப்ப அவுட் கேட்பது போல் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்தனர். இப்போ 13 பவுண்டரி அடிச்சாலும் வேஸ்ட்.. சூர்யகுமார் மீது கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த பந்தை அடிப்பதற்காக இசான் கிஷன் கொஞ்சம் நகர்ந்து வந்து அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்தும் அப்போதும் ஓயிடாக தான் இருந்தது. இதனால் நடுவர் நிதின் மேனன், இதற்கு ஓயிடு வழங்கினார்.

இதனால் கடுப்பான ஆஸ்திரேலிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்தீவ் வெட், நடுவரை இதற்கு எப்படி ஓயிடு வழங்கலாம் என்று கூறி, கோபமாக திட்டினார். இதனையே இந்திய வீரர் செய்து இருந்தால், ஐசிசி அபராதம் விதித்து இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய வீரருக்கு ஐசிசி தண்டனை வழங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Share this story