கிரிக்கெட் டுடே : இங்கிலாந்து-ஆஸ்திரேலியா.. சதம் அடித்து மார்னஸ் அசத்தல்..

Cricket Today England-Australia .. Marnus scores a century ..

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 

பேட்டிங் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

சதம் :

இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில், மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 103  ரன்களில் இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.  

உணவு  இடைவேளை வரை, ஆஸ்திரேலிய அணி  5 விக்கெட்  இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. 

ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும் .அலெக்ஸ் கேரி 5 ரன்களுடனும்  ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Share this story