கிரிக்கெட் டுடே : 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர்..

Cricket Today Indian batsman takes 3 wickets.

இன்றைய இந்தியா-நியூசிலாந்து மேட்சில்,
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 

44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா , அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி அதே ஓவரில் கடைசிப் பந்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

இந்திய அணியின் மூன்று விக்கெட்களையும் நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் வீழ்த்தியுள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 7 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 
*

Share this story