கிரிக்கெட் டுடே: இங்கிலாந்திற்கு எதிராக சாதனை படைத்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா..

By 
deepti

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி14 ஆம் தேதி தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, சுபா சதீஷ் 69 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 68 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 66 ரன்களும், தீப்தி சர்மா 67 ரன்களும் எடுக்கவே இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்கள் குவித்தது.

இதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி தீப்தி சர்மாவின் சுழலில் 136 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிகபட்சமாக 59 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா பேட்டிங்கில் 113 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 67 ரன்கள் எடுத்ததோடு, பவுலிங்கில் 5.3 ஓவர்களில் 4 மெய்டன் உள்பட 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

அதோடு, அரைசதம் அடித்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீராங்கனைகளின் பட்டியலில் தீப்தி சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை சுபாங்கி குல்கர்னி நியூசிலாந்திற்கு எதிரான 79 ரன்கள் எடுத்ததோடு 99 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இந்திய வீராங்கனைகள்:

8/53 - நீது டேவிட் – 1995 ஆம் ஆண்டு

5/7 – தீப்தி சர்மா - 2023

5/24 – பூர்ணிமா ராவ் - 1999

5/25 – ஜூலன் கோஸ்வாமி - 2005

5/33 – ஜூலன் கோஸ்வாமி - 2006

5/45 – ஜூலன் கோஸ்வாமி – 2006

Share this story