கிரிக்கெட் டுடே : 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஸ்டார்ட்..

Cricket Today 16 teams start Junior World Cup.


இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
    
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.

பிப்ரவரி 5-ந்தேதி வரை :

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. 

அங்குள்ள 4 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, 

ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா, ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 

லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். 

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக, நியூசிலாந்து அணி பின்வாங்கியதால் ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

முதல் ஆட்டம் :

முதல் நாளான இன்று நடக்கும் ஆட்டங்களில், வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 15-ந்தேதி எதிர்கொள்கிறது. 

எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
*

Share this story