கிரிக்கெட் டுடே : நேபாளத்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி புதிய சாதனை; ரன்ஸ் விவரம்..

By 
pre11

6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முலதான் நகரில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன் வித்தியாசத்தில் நேபா ளத்தை வீழ்த்தியது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 131 பந்தில் 151 ரன்னும் (14 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகார் அகமது 71 பந்தில் 109 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பின்னர் ஆடிய நேபாளம் 23.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சோம்பால் காமி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். ஷதாப்கான் 4 விக்கெட்டும், ஷகின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்டும், நசிம் ஷா, முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள். 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி வெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்தது. ஆசிய கோப்பையில் 2-வது மிகப்பெரிய வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.

2008-ம் ஆண்டு ஆங்காங்குக்கு எதிராக இந்தியா 256 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் பாகிஸ்தானின் 3-வது பெரிய வெற்றி இதுவாகும். 2016-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 255 ரன்னிலும், 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 244 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

நேபாளம் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த அணி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்தது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தகுதி சுற்றில் நேபாளத்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆசிய கோப்பை போட்டியில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்தார்.

இதற்கு முன்பு வீராட் கோலி கேப்டன் பதவியில் 136 ரன் எடுத்து இருந்தார். 2014-ல் வங்காள தேசத்துக்கு எதிராக இதை எடுத்து இருந்தார். இதை தற்போது பாபர் ஆசம் முறியடித்தார். பாபர் ஆசம் 102 இன்னிங்சில் 19-வது சதத்தை எடுத்தார். இதன் மூலம் ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), சாதனையை அவர் முறியடித்தார். இப்தார்கான் அகமது 67 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் அதிக வேகத்தில் சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஆசிய கோப்பை போட்டியில் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தல் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இலங்கை-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.
 

Share this story