கிரிக்கெட் டுடே- இவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் : ரிக்கி பாண்டிங் விருப்பம்

Cricket Today- To appoint him as captain Ricky Ponting option

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆஷஸ் தொடரில், 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
 
இன்று இறுதி நாள் :

இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 

இதில், இறுதி நாளான இன்று இங்கிலாந்து 358 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற நிலையில் களமிறங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் :

இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டனாக பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில போட்டிகளில், பெற்ற தோல்வியின் எதிரொலியால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். 

இந்த நேரத்தில், பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டால், இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியும்' என்றார்.

Share this story