கிரிக்கெட் டுடே: டோனி செய்யாத ஒன்றை ஒரு கேப்டனாக சூர்யகுமார் செய்து சாதனை..

By 
kk9

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் அரைசதம் அடித்ததன் மூலமாக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 10 ஆம் தேதி நடக்க இருந்த முதல் டி20 போட்டியானது டர்பனில் பெய்த மழையின் காரணமாக டாஸ் போட முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது கியூபெர்கா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் உடல்நிலை சரியில்லாத நிலையில், இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவி பிஷ்னோய் இடம் பெறவில்லை.

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 3 பந்துகள் பிடித்த ஒரு ரன் கூட எடுக்காமல் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.    சுப்மன் கில்லும் 2 பந்துகள் பிடித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்து தடுமாறியது.

அதன் பிறகு திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில், திலக் வர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் 15 ரன்கள் எடுத்திருந்த போது டி20 போட்டியில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அவர், 56 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்துள்ளார்.

கேஎல் ராகுல் 68 இன்னிங்ஸ் விளையாடிய 2256 ரன்களும், 140 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 3853 ரன்களும், 107 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 4008 ரன்களும் எடுத்துள்ளனர். குறைவான இன்னிங்ஸ் விளையாடிய 2000 ரன்கள் கடந்தவர்களின் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 52 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 56 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்துள்ளனர். கேஎல் ராகுல் 58 இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும், டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 இன்னிங்ஸில் 4 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த நிலையில், தான், 29 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். ஒரு கேப்டனாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் அரைசதம். கடைசியாக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 56 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன் மூலமாக ஒரு கேப்டனாக எம்.எஸ்.தோனி செய்யாத ஒன்றை சூர்யகுமார் யாதவ் செய்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தோனி 36 மற்றும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story