கிரிக்கெட் டுடே : 350 ரன்னுக்குள் இந்திய அணியை சுருட்டுவோம் : நிகிடி மிரட்டல்

By 
Cricket Today We will roll the Indian team within 350 runs Nikiti threat

இந்தியா-தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சூரியன் நகரில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 

இந்திய வீரர்கள் :

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார்.

புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் கேப்டன் விராட் கோலி 35 ரன்னிலும் அவுட்டானார்கள். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 90 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்து இருந்தது.

லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று மதியம் 1.30 மணிக்கு 2-வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

3 விக்கெட் :

இந்தியாவின் 3 விக்கெட்களையும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி கைப்பற்றினார். 

இந்நிலையில், இந்தியாவை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் என்று நிகிடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு செ‌ஷனில் நீங்கள் வெற்றி பெறலாம். தோல்வியும் அடையலாம். 

ஒட்டு மொத்தமாக, இது கிரிக்கெட்டின் நல்ல நாளாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் இன்னும் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அது விரைவாக நடக்கலாம். 

இந்திய அணியை 350 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் போட்டியை மாற்ற முடியும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்த ரன்னுக்குள் இந்தியாவை ஆல்அவுட் செய்துவிட்டால், எங்களுக்கு நன்றாக இருக்கும். 

ஆடுகளம் நாங்கள் நினைத்தை விட குறைவாகவே சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். 

பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்காதபோது, நீங்கள் வெளிப்படையாக உங்கள் திட்டங்களை மாற்றி வேறு விதமாக முயற்சிக்க வேண்டும்' என்றார்.

ஸ்கோர் :

செஞ்சூரியன் டெஸ்டில், முதல் நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 

இன்றைய ஆட்டத்தில், மேலும் ரன்களை குவித்து, பெரிய ஸ்கோரை எடுக்க இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.
*

Share this story