கிரிக்கெட் ராஜ்ஜியம் : தலைமை பயிற்சியாளருக்கான தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By 
coach2

தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தலைமை பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதன் பிறகு யார் என்பதற்கான தேடலில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்காக பிசிசிஐ ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங்கை அணுகியிருக்கிறது.

ஆனால், அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், இது தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்காக எந்த ஆஸ்திரேலிய வீரரையும் பிசிசிஐ அணுகவில்லை என்று ஜெய் ஷா உறுதிப்பட கூறினார். ரிக்கி பாண்டிங் மட்டுமின்றி ஜஸ்டின் லங்கர், ஆண்டி பிளவர் ஆகியோரும் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில், கவுதம் காம்பீர் தான் தற்போது முன்னிலையில் இருக்கிறார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் வருவதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக தலைமை பயிற்சியாளருக்கான தகுதி என்ன? அவரது ஆண்டு வருமானம் எப்படி இருக்கும் என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பயிற்சியாளர் வீரர்களுடன் அவர்கள் விளையாடும் நாட்டிற்கு செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஐபிஎல் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் அவர்களுடன் தங்கியிருக்க வேண்டும். மேலும், தொடர் நடைபெறவில்லை என்றால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரது பதவிக்காலம் 3.5 ஆண்டுகள். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரையில் 2 ஆண்டுகள் மட்டுமே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், டி20 உலகக் கோப்பை தொடர் காரணமாக அவரது ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, வரும் ஜூன் 29 ஆம் தேதியுடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிதாக தேர்வு செய்யப்படும் தலைமை பயிற்சியாளர் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் அணியுடன் இருப்பார்கள்.

இந்திய அணியை டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சியாளரின் பொறுப்புகள் இருக்க வேண்டும். இதற்கு முதலில் பயிற்சியாளர் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கிரிக்கெட்டில் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். மேலும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும்.

அதோடு, ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும். மேலும், 20 நிலை கொண்ட 3 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தலைமை பயிற்சியாளருக்கு இவ்வளவு என்று சம்பளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இல்லை என்றாலும், திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றை பொறுத்து பயிற்சியாளருக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. தலைமை பயிற்சியாளருக்கு 10 கோடி வரையில் சம்பளமும் போட்டி நடைபெறும் நாட்களிலும் அல்லோவன்ஸாக நாள்தோறும் ரூ.20,814 வீதம் பயிசியாளருக்கு வழங்கப்படுகிறது.

Share this story