கோர்ட் உத்தரவை மீறியதால், கிரிக்கெட் வீரர் கைது..

By 
Cricketer arrested for violating court order

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த  இருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 1993-2001 வரை ஆஸ்திரேலியாவுக்காக, 74 டெஸ்ட்  போட்டிகள் மற்றும் 5000 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார்.

இவர் 42 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதன் பிறகு 15 ஆண்டுகளாக அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் டிவி திரைகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். 

செவன் நெட்வொர்க் வர்ணனைக் குழுவிலிருந்து ஸ்லேட்டர் சமீபத்தில் நீக்கப்பட்டார்.

குடும்ப வன்முறை :

சில மாதங்களுக்கு முன்பு  குடும்ப வன்முறை காரணமாகக் கைது செய்யப்பட்டர். பின்னர், இவருக்கு மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதால், அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. 

இதையடுத்து, வீரர் ஸ்லேட்டருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பாதிலேயே நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.  

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி, 'ஸ்லேட்டர் வீடியோ இணைப்பு மூலம் மேன்லி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.   

மீண்டும் கைது :

இந்நிலையில்,  ஸ்லேட்டர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி நேரத்தில் 66 குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், புகார்தாரருக்கு 18 தொலைபேசி அழைப்புகள் செய்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவு மீறியதால், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
*

Share this story