பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்.. தீர்ப்பு.?

By 
san22

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனே கடந்த ஆண்டு 17 வயதான மைனர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நேபாள கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார்.

இது சம்பந்தமான வழக்கு விசாரணையில் சந்தீப் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த நிலையில் விசாரணையில் அவர் குற்றவாளி என்பது அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை என்ன என்பது அடுத்த ஹியரிங்கில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தீர்ப்பு வந்த போது சந்தீப் நேபாள ப்ரோ லீக் தொடரில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story