புஷ்பாவாக மாறினார், கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் : வைரலாகும் புகைப்படம்.. 

By 
push

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. புஷ்பா தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் பதிவு அதாவது, டேவிட் வர்னர், 'புஷ்பா -2' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். டேவிட் வார்னர் தனது இணையப் பக்கத்தில் அடிக்கடி இவ்வாறு பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story