6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் : எப்படி தெரியுமா?

child41

இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அதன் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் காயங்கள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஒரு ஆண்டு ஆகும் என்று கூறப்பட்டது. அவர் 50 ஓவர் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கூட அவர் தவற விட வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

25 வயதான ரிஷப் பண்ட் இப்படி தனது கரியரின் சிறப்பான ஃபார்மில் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கடினமான சூழ்நிலையில் கூட அவர் தனது 6 வயது ரசிகரின் ஆசையை நிறைவேற்றி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் ரிஷப் பண்டின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்த அயான் என்கிற சிறுவனின் தந்தை கூறியிருப்பதாவது:-

என்னுடைய மகன் உங்களுடைய தீவிர ரசிகன். உங்களைப் போன்றே இடதுகை பேட்ஸ்மேன் தான். மேலும் எதிர்காலத்தில் உங்களைப் போன்ற கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று விரும்புகிறார். அதுமட்டுமின்றி நீங்கள் குணம் அடைய வேண்டும் என டிசம்பர் 30-ம் தேதி முதல் பிரார்த்தனை செய்து வருகிறார்.

இன்று அவனுக்கு 6-வது பிறந்தநாள் உங்களால் அவனுக்கு வாழ்த்து சொல்ல முடியுமா? என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டிருந்தார். அதேபோன்று தனது மகன் விளையாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவினை கண்ட ரிஷப் பண்ட் " பிறந்தநாள் வாழ்த்துக்கள் அயன் ", "இந்த வருடம் உனக்கு சிறப்பாக அமையட்டும்" என்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுவனை வாழ்த்தி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story