அதிகமுறை டக் அவுட் ஆன கிரிக்கெட் வீரர்; இதிலுமா சாதனை?

By 
out

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொஹாலியில் நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி சார்பாக சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17.3 ஓவரில்  4 விக்கெட்களை இழந்து  159 ரன்கள் எடுத்து 6  விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றி ஒரு வீரராக ரோஹித் ஷர்மாவின் 100 சர்வதேச டி 20 வெற்றியாகும். அதிக வெற்றிகள் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் அந்த போட்டியில் படைத்தார். அதுமட்டுமில்லாமல் டி 20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். 11 முறை டக் அவுட் ஆகியுள்ள அவருக்கு அடுத்த படியாக கே எல் ராகுல் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

Share this story