கொலை வழக்கில் ஓராண்டு தண்டனை அனுபவித்த கிரிக்கெட் வீரர் இன்று விடுதலை..

By 
sidu

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரசில் பணியாற்றி வருகிறார். 

அவர் 1988-ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் 65 வயது முதியவரை தாக்கியதில், முதியவர் உயிரிழந்தார். இதன் மேல்முறையீட்டு வழக்கில், சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. 

அதைத்தொடர்ந்து, அவர் கடந்த ஆண்டு மே 20-ந் தேதி, பாட்டியாலாவில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பிறகு, பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். 

சிறையில் நன்னடத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தண்டனை குறைப்பு அளிக்க பஞ்சாப் சிறைத்துறை விதிமுறை வகை செய்கிறது. 

அதன்படி, சித்து தண்டனை குறைப்பு பெற்று இன்று (சனிக்கிழமை) பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவருடைய வக்கீல் வர்மா தெரிவித்தார். 


 

Share this story