2023 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு தலைவர் விருது வென்ற கிரிக்கெட் வீரர்.. யார் தெரியுமா?

By 
ter2

ஆண்டுதோறும் இந்தியன் பிசினஸ் லீடர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்துறை முழுவதும் புதுமை, வளர்ச்சி மற்றும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் இந்தியன் பிசினஸ் லீடர் விருதின் 19ஆவது பதிப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது.

விருதுகளின் நடுவர் குழுவில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைவர் ரோகித் ஜாவா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி,  கிளஸ்டர், ஜரின் தருவாலா, தி ஃபெடரல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஷியாம் சீனிவாசன் ஆகியோர் உள்படர் பலர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய தலைவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் சுப்மன் கில்லிற்கு சிறந்த விளையாட்டு வீரர்/தலைவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் கிரிக்கெட் உலகில் தனது சாதனைகளுக்காக ஆண்டின் சிறந்த விளையாட்டுத் தலைவர் விருது பெற்றார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் (208) அடித்த இளம் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2,000 ரன்களை கடந்தவர், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர்களில் ஒருவர் என்று பல சாதனைகளை படைத்து இந்த விருதுக்கு சொந்தக்காரரானார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். வரும் டிசம்பர் 10 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெறவில்லை.

Share this story