சிஎஸ்கே சிங்கம்..6 சிக்ஸ்,11 பவுண்டரி 51 பந்துகளில் சதமடித்து அசத்தல்...

By 
ruthu2

சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முதலே சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான ஃபார்மில் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 590 ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட். இதனைத் தொடர்ந்து திருமணம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான மாற்று வீரராக இங்கிலாந்து பயணம் செல்ல முடியவில்ல.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆசிய போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்த ஃபார்மை சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி மிரட்டியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.

Share this story