ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே வீரர் விலகல்..

By 
khi

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த டேவன் கான்வே காயம் காரணமாக, அந்த அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சிஎஸ்கே அணி சேர்த்துள்ளது.

2022, 2023 ஆகிய கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் டேவன் கான்வே. நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கான்வே மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்களைச் சேர்த்துள்ளார். 9 அரை சதங்களை விளாசியுள்ள அவரின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 92 ரன்களாகும்.

இந்நிலையில், அவர் காயம் காரணமாக தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் க்ளீசன் இதுவரை மொத்தமாக 90 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

Share this story