அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

Curious to see him play The goalie is waiting

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். 2-வது பகுதி ஆட்டத்தில் விளையாட சில வீரர்கள் மறுத்துள்ளனர். 

இதனால், அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திறன் மிக்கவர்கள் :

இங்கிலாந்தில் இருந்து ஆர்.சி.பி. அணி கேப்டன் விராட் கோலி துபாய் வந்தடைந்துள்ளார். தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் அணியுடன் இணைய இருக்கிறார்.
 
இந்நிலையில், விராட் கோலி இதுகுறித்து கூறியதாவது :

‘நான் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்தேன். நாங்கள் கடந்த மாதத்தில் யார் அணியில் இணைகிறார்கள், வெளியேறுகிறார்கள் என்பதை குறித்து ஆலோசனை நடத்தினோம்.

குடும்பத்தின் ஒரு பகுதி்:

எங்களுடைய முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில், தரம் வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம். முக்கிய வீரர்களை தவற விடுகிறோம். அவர்கள் எங்கள் ஆர்.சி.பி. குடும்பத்தின் ஒரு பகுதி. 

ஆனால், புதிதாக அணியில் இணைந்தவர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள். குறிப்பாக இங்குள்ள சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்.

அவர்கள் மொத்த அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருப்பதை பார்க்க, ஆர்வமாக இருக்கிறேன். 

அதேபோல் முதல் பகுதியில் சிறப்பாக செயல்பட்டதை போன்று, 2-வது பகுதியையும் சிறப்பாக தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.

Share this story