கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த டேவிட் வார்னர்.. ஏன்?

By 
d3

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்(37) பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இவர் 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்கள் குவித்துள்ளார். 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8695 ரன்கள் குவித்துள்ளார். 99 டி 20 போட்டிகளில் விளையாடி 2894 ரன்கள் அடித்துள்ளார்.

Share this story