அவருக்கு தோல்வி, எனக்கு வெற்றி : 'டென்னிஸ் சூறாவளி' அரினா சபலென்கா

By 
Failing him, I win 'Tennis Hurricane' Arena Sabalenka

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில், 4-வது இடத்தில் இருப்பவர், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்.

அதிர்ச்சித் தோல்வி :

இவர் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், முன்னாள் சாம்பியனும், 10-ம் நிலை வீராங்கனையுமான பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) 3-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

வெற்றி வீராங்கனை :
 
இன்னொரு ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்சை தோற்கடித்து, 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை பெற்றனர்.

Share this story