இரட்டை சதம் அடித்து, டெல்லி வீரர் சுபோத் புதிய சாதனை..

By 
Delhi batsman Subodh sets a new record by scoring a double hundred.

2015-ல் அறிமுகமான சுபோத் பாட்டி டெல்லி அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார்.

17 சிக்சர் :

டெல்லி லெவன் அணிக்கும், சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர்  போட்டி நடைபெற்றது. அதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. 

இதில், விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை குவித்தார். இதில் 17 சிக்சர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும்.

இதன்மூலம், 20 ஓவர் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபோத் பாட்டி.

புதிய சாதனை :

30 வயதாகும் சுபோத் பாட்டி, அடிப்படையில் ஒரு பவுலர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால், பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சர்வதேச 20 ஓவர்  கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக  அவுட் இல்லாமல் 66 பந்துகளில் 175  ரன்கள் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் மசகட்சா இருக்கிறார். இவர் அவுட் இல்லாமல் 71 பந்துகளில் 162  ரன்கள் விளாசி இருக்கிறார். 

இவர்களின் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் பாட்டி தற்போது தகர்த்து சாதனை படைத்துள்ளார்.

Share this story