ஒரே வார்த்தையில் டோனியை புகழ்ந்த டெல்லி வீரர்கள் : வைரலாகும் நிகழ்வு..

 

msd7

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 55-வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்த சீசனில் சிஎஸ்கேவை முதல் முறையாக சந்திக்கிறது டெல்லி. டெல்லி வீரர்களிடம் எம்.எஸ்.டோனி குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என்று ஒவ்வொரு வீரராக கேட்கப்பட்டது.

இஷாந்த் சர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட டெல்லி வீரர்கள் டோனி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்தனர். இந்த வீடியோவை டுவிட்டரில் டெல்லி கேபிட்டல்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "இஷாந்த் சர்மா, டோனியை 'பிக் பிரதமர்' என்றும், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், டோனியை 'மிஸ்டர் கூல்' என்றும் தெரிவித்தனர்.
 

Share this story