நடிகர் அஜித்தை சந்தித்த தேஷ்பாண்டே; வைரலாகும் நிகழ்வு..  

By 
desh

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 46ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேரில் மிட்செல் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், கெய்க்வாட் 98 ரன்களும், மிட்செல் 52 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ச் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 13, அபிஷேக் சர்மா 15 ரன்களில் வெளியேற, இம்பேக்ட் பிளேயராக வந்த அன்மோல்ப்ரீத் சிங் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எய்டன் மார்க்ரம் 32, நிதிஷ் ரெட்டி 15, ஹென்ரிச் கிளாசென் 20, அப்துல் சமாத் 19 ரன்களில் நடையை கட்டினர். கடைசியில் வந்த ஷாபாஸ் அகமது 7, பேட் கம்மின்ஸ், 5, புவனேஷ்வர் குமார் 4, ஜெயதேவ் உனத்கட் 1 என்று சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மேலும், முஷ்தாபிஜூர் ரஹ்மான், மதீஷா பதிரனா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த நிலையில்தான், இந்தப் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித் குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

3 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 3 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்த சீசனில் அவர் விளையாடிய 8 போட்டிகளில் ( முந்திய போட்டி அல்லாமல்) 29 ஓவர்கள் வீசி 250 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

ஆனால், அஜித்தை சந்தித்த பிறகு அவர் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதற்கு முன்னதாக, அவர் 3/45 விக்கெட்டுகள் கைப்பற்றியதே அதிகபட்சமாக இருந்தது. 

இதே போன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் தனது பிறந்தநாளை அஜித்துடன் இணைந்து கொண்டாடினார். அதன் பிறகு நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story