ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், எந்த அணி முதலிடம் தெரியுமா?

By 
lia1

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமனில் முடித்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதேவேளையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. 

அந்த அணி 118 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து (115), தென் ஆப்பிரிக்கா (106), நியூஸிலாந்து (95), பாகிஸ்தான் (92), இலங்கை (79), மேற்கு இந்தியத் தீவுகள் (77), வங்கதேசம் (51), ஜிம்பாப்வே (32) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 10 இடங்களில் உள்ளன.

அதேவேளையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 54.16 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது.

Share this story