டோனிக்கு நிகர் யார் தெரியுமா? : ஹர்திக் பாண்ட்யா பேச்சு

pandya4

சி.எஸ்.கே. அணியிடம் தோற்று, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

நாங்கள் பலமாக இருந்தபோதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை கூடுதலாக விட்டு கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிறைய விஷயங்களை நாங்கள் சரியாக செய்தோம். சில ஓவர்களில் ரன் அதிகமாக சென்றுவிட்டது.

ஆட்டத்தில் பனி வரும் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. நாங்கள் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. இறுதிப் போட்டியில் நுழைய எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம்.

பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான். அவரை போன்று பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம். டோனி அடிக்கடி பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம்.

பாராட்டு எல்லாம் டோனியை சாரும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

Share this story