எனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்கிறேன்: டீன் எல்கர் திடீர் முடிவு..

By 
dean

இந்திய அணி வரும் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரோடு தென்னாப்பிரிக்க அணியின் முனனாள் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தனது சர்வதேசக் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது ஓய்வு பற்றி பேசியுள்ள அவர் “எனது தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பது எனது கனவு.  12 ஆண்டுகளாக அதை செய்ய முடிந்தது எனக்கு பெருமை.  இந்த பயணத்தை என்னுடைய அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்.

எல்லா நலல் விஷயங்களுக்கும் முடிவு என்பது உண்டு.  இந்திய தொடர்தான் என்னுடைய கடைசி தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதன் முதலில் சதமடித்த எனக்கு மிகவும் பிடித்த கேப்டவுன் மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Share this story