களமிறங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி.. இந்தியாவிற்கு ஸ்கெட்ச் போட்ட பென் ஸ்டோக்ஸ்..

By 
stoo

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். 

இதில், விராட் கோலி தனிப்பட்ட காரணம் தொடர்பாக இடம் பெறவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினார். மேலும், கேஎல் ராகுல் உடல் தகுதி எட்டாத நிலையில், 3ஆவது போட்டியிலிருந்து விலகினார்.

ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், துருவ் ஜூரெல் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான், நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் என்று இடம் பெற்றுள்ளனர். இதில், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் சுழலுக்கு ஜோ ரூட் இருக்கிறார்.


 

Share this story