ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

By 
Every compliment goes to the players and staff Captain Tony

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சகா 44 ரன் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சிறப்பு :

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்னும், டுபெலிசிஸ் 41 ரன்னும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வென்றது. அந்த அணி பெற்ற 9-வது வெற்றி (11 ஆட்டம்) இதுவாகும். 

இதன் மூலம் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பாராட்டுகள் :

வெற்றி குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது :

கடந்த போட்டி முடிந்த பிறகு, பரிசு அளிப்பு விழாவில் நான் பேசும்போது, நாங்கள் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினேன். அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். முதல் கட்ட ஐ.பி.எல். போட்டியில் கூட அதை நாங்கள் செய்தோம்.

ஒவ்வொரு பாராட்டும் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

இந்த ஆடுகளம், பந்து திரும்பும் வகையில் இல்லை. ஆனால், நல்ல பவுன்ஸ் இருந்தது. பந்து வீச்சாளர்கள், வேகத்தையும், சரியான அளவிலும் வீசினர். இதை தான் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கூறினேன்.

அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் நன்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். 

நாங்கள் ரசிகர்களை பற்றி பெருமைப்படுகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக, நான் பெருமையுடன் சொல்ல முடியும்' என்றார்.
*

Share this story