ஃபுட்பால் தர்பார் : ஒடிசா - கோவா அணிகள் இன்று பாய்ச்சல்..

Football Durbar Odisha - Goa teams make a leap today ..

ஐ.எஸ்.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - கோவா அணிகள் மோதுகின்றன.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. 

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கடந்த ஆண்டுபோல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - கோவா அணிகள் மோதுகின்றன.

ஒடிசா அணி, தாங்கள்  விளையாடிய 6 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வி என்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 

கேரளா 6 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என்று 8-வது  இடத்தில் உள்ளது.
*

Share this story