அணியின் நடத்தை பிடிக்காததால், முன்னாள் கேப்டன் பதவி விலகல்
 

By 
Former captain resigns because he did not like the team's behavior

வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால், யூனிஸ்கான் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

யூனிஸ்கான் :

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் 43 வயதான யூனிஸ்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்தம் இருந்தது.
 
இந்நிலையில், அவர் திடீரென பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 

பிடிக்கவில்லை :

கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக ஒதுங்கிய அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால், அவர் பதவியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 25-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு பயணித்து ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் ஆடுகிறது. 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பேட்டிங் பயிற்சியாளர் இன்றி செல்லும் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமிப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Share this story