ரிஷப் பண்ட் மீது, கவுதம் கம்பீர் கடும் சாடல், ஏனெனில்..
 

Gautam Gambhir lashes out at Rishabh Pund, because ..


இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. 

முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரிஷாப் பண்ட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்கள் சேர்த்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 

புஜாரா (53), ரகானே (58) அரைசதம் அடித்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. 

ஹனுமா விஹாரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். இதனால், இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.

வாக்குவாதம் :

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு, 163 ரன்கள் எடுத்திருக்கும்போது, ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். அவர் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். 

களம் இறங்கியதும், தென்ஆப்பிரிக்க வீரர் வான் டெர் டஸ்சன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த பந்து ஹெல்மட்டை தாக்கியது. 

ரபடா வீசிய அடுத்த ஷாட் பிட்சி பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். ஆனால், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 
இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொறுப்பற்ற தன்மையுடன் ஆட்டமிழந்ததால், ரிஷாப் பண்டை கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

கற்றுக்கொள்ள வேண்டும் :

ரிஷாப் பண்ட் குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘'யாராவது ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் எளிதான விசயம். 

அதேபோல், உங்களுடைய கையில் பேட் கொடுக்கப்பட்டு, எதிரணி பந்து வீச்சை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்போது, அது மிகவும் கடுமையான விசயமாக இருக்கும்.

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த நிலையில், ரிஷாப் பண்ட் சண்டை போடுவதை விட்டுவிட்டு, மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதைத்தான் நான் விரும்பியிருப்பேன்.

என்னைப் பொறுத்த வரைக்கும், ஏமாற்றம் என்பது மிக மிக குறைத்து மதிப்பிடும் சொல் எனக் கருதுவேன். 

ஏனென்றால், இந்த வகையில் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது கற்றுக் கொள்வது. இந்தியாவில் இளம் வீரர்கள், டீன் எல்கரிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். 

ஏனென்றால், தலைசிறந்த அணிக்கெதிராக விளையாடும்போது எளிதான ரன்கள் சேர்த்து விட முடியாது’ என்றார்.

Share this story