கோலி பேட்டிங் செய்த விமர்சனம் : ரிஷப் பண்ட் விளக்கம்

By 
Goalie batting review Rishabh Pundt's explanation

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால், இந்திய வீரர்கள் நிலை குலைந்தனர். 40.4 ஓவர்களில் இந்தியா 78 ரன்னில் சுருண்டது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் எடுத்த 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 

ரோகித்-ரகானே :

ரோகித்சர்மா (19 ரன்), ரகானே (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள்.

ஆண்டர்சன், ஓவர்டென் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், சாம்கரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர்களான ஹசீப் ஹமீது 60 ரன்னும், ராய்பர்னஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

தொடக்க நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி தற்போது 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.

விமர்சனம் :

டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடக்கத்தில், பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மளமளவென வீழ்ந்தனர்.

கடந்த 10 டெஸ்டில் டாசில் தோற்ற விராட் கோலி இந்த முறை டாசை வென்றார். 

ஆனால், அவர் எடுத்த முடிவு அணிக்கு பாதகமான நிலையை ஏற்படுத்திவிட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 

2-வது இன்னிங்சில் இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கிறது.

ஆதரவு :

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்தது ஒட்டு மொத்த முடிவாகும் என்று விராட் கோலிக்கு விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரி‌ஷப் பண்ட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது :

நேற்று காலை ஆடுகளம் பந்து வீச்சுக்கு உகந்த நிலையில் இருந்தது. 

இதை பயன்படுத்தி, இங்கிலாந்து வீரர்கள் நேர்த்தியாக வீசினார்கள். முதலில் பேட்டிங் செய்வது என்பது அணியின் ஒட்டு மொத்த முடிவாகும். எந்த முடிவாக இருந்தாலும், அது அணியை சார்ந்ததுதான்.

தினமும் பேட்டிங் 100 சதவீதத்தில் இருக்காது. சில நேரங்களில் அது சரியாக அமையாமல் போகும். 

அதையே நினைத்துக் கொண்டு இருக்க முடியாது. தவறில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்' என்றார்.

Share this story