கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார் : மைக்கேல் வாகன்-வினோத் காம்ப்ளி கருத்து..

Goalie resigns as captain Michael Vaughan-Vinod Kambli comment ..

இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் ஐக்கிய அரபி எமிரேட்சில் தொடங்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு, 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று திடீரென்று அறிவித்தார்.

பணிச்சுமை :

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். 

பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விராட்கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர்கள் பலர், பாராட்டி உள்ளார்கள். 

சுயநலமற்ற முடிவு :

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில் கூறும்போது,' விராட் கோலியின் இந்த முடிவு மிகவும் சுயநலமற்றதாகும். 

அனைத்து அழுத்தங்களிலும் இருந்து, சிறிது ஓய்வு எடுக்க உங்களுக்கு நல்ல இடத்தை அளிக்கும், இந்த முடிவுக்கு பாராட்டு' என்று கூறியுள்ளார்.

வினோத் காம்ப்ளி :

இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியதாவது :

தற்போது 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலக இருக்கிறார். அவரது இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆனால் அவர் தற்போது நிம்மதியாக உணர்வார். நாம் விராட்கோலியை ஒரு பேட்ஸ்மேனாக பார்க்க போகிறோம். 

ஏனென்றால், அவர் நெருக்கடி இல்லாமல் இருப்பார். விராட்கோலி தனது முழு திறமையுடன் எந்த நெருக்கடி இல்லாமல் விளையாடுவார். அவர் சுதந்திரமாக விளையாடவே நான் விரும்புகிறேன்.

அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்று நினைக்கிறேன். 

ஏனென்றால், அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

Share this story