தரவரிசையில் கோலி, ரோகித், ராகுல், அஸ்வின் பெற்ற இடம் : ஐசிசி அறிவிப்பு

Goalie, Rohit, Rahul, Aswin in Rankings ICC Announcement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் லாபஸ்சேன் முதலிடம் பிடித்து அசத்தியுளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்தில் உள்ளார்.

ரோகித்-கோலி :

பட்டியலில், ரோகித் சர்மா 5-வது இடத்தில் நீடிக்கிறார். கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பாகிஸ்தானின் பாபர் அசாம் 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 10-வது இடத்திலும் உள்ளனர்.

அஸ்வின் :

இதேபோல், பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடமும், பும்ரா 9-வது இடமும் பிடித்துள்ளனர்.

ஆல் ரவுண்டர் வரிசையில் அஸ்வின் 2-வது இடமும், ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் உள்ளனர்.
*

Share this story