எதிர்நீச்சல் போட்டு, தங்கம் வென்ற சிங்கப்பெண்கள்; ஆதலால் உலக சாதனை..

By 
Gold medal-winning, gold-winning lionesses; Hence the world record ..

ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் துனிசியாவும், பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில் ஜப்பானும், தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.

உலக சாதனை :

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்த பிரிவில் 3 நிமிடம் 29.69 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்தது. 

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 3 நிமிடம் 30.05 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து, ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.

கனடாவுக்கு வெள்ளி பதக்கமும் (3 நிமிடம் 32.78 வினாடி), அமெரிக்காவுக்கு (3 நிமிடம் 32.81 வினாடி) வெண்கல பதக்கமும் கிடைத்தது.

முதல் தங்கப்பதக்கம் :

அமெரிக்காவுக்கு இன்று, முதல் தங்கப்பதக்கம் நீச்சல் மூலம் கிடைத்தது. ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில் அந்நாட்டு வீரர் சேஸ் காலிஸ் தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வெள்ளியும், ஆஸ்திரேலிய வீரர் வெண்கலமும் பெற்றனர்.

ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் துனிசியாவும், பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லெ பிரிவில், ஜப்பானும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கு, முதல் தங்கப்பதக்கம் இன்று கிடைத்தது. 

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், அந்நாட்டை சேர்ந்த விட்டாலினா பேட்சராஸ் கினா தங்கம் வென்றார். அவர் 240.03 புள்ளிகள் பெற்று, புதிய ஒலிம்பிக் சாதனை பெற்றார்.

பல்கேரியாவுக்கு வெள்ளிப் பதக்கமும், சீனாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தன

Share this story