ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா; உடனே உதவிய கோலி..

By 
pa3

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசிய ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட வலியால் துடிதுடித்த நிலையில், பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி வங்கதேச அணியில் தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக அடிக்கத் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன்னும், 2ஆவது ஓவரில் 4 ரன்னும், 3ஆவது ஓவரில் மெய்டன், 4ஆவது ஓவரில் 1 ரன்னும், 5ஆவது ஓவரில் 4 ரன்னும், 6ஆவது ஓவரில் 9 ரன் என்று மொத்தமாக 6 ஓவர்களில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.

அடுத்த 2 ஓவர்களில் வங்கதேச அணி 18 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், தான் 9ஆவது ஓவரை வீசுவதற்கு ஹர்திக் பாண்டியா அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 2ஆவது மற்றும் 3ஆவது பந்தில் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். 3ஆவது பந்தை ஸ்ட்ரைட்டாக அடிக்கவே, பந்தை தடுக்க வேண்டும் என்பதற்காக காலை கொடுக்கவே, இடது காலில் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிசியோ வரவழைக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டார். எனினும், அவர் பந்து வீசுவதற்கு தயாரான நிலையிலும் அவரால் முடியாமல் வெளியேறினார். மேலும், அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து எஞ்சிய 3 பந்துகளை வீசுவதற்கு விராட் கோலி வரவழிக்கப்பட்டார். இதில் முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 5ஆவது மற்றும் 6ஆவது பந்தில் ஒரு ஒரு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி பந்து வீசியுள்ளார். ஆனால், 3 பந்துகள் மட்டுமே பந்துவீசியிருக்கிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் விராட் கோலி ஒரு ஓவர் பந்து வீசி 6 ரன்கள் கொடுத்தார். இதே போன்று மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஒரு ஓவர் மட்டுமே வீசி 6 ரன்கள் கொடுத்தார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விராட் கோலி பந்து வீசி ஒரு ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்தார். ஆனால், அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விராட் கொலி பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this story