ஹர்திக் பாண்ட்யா – நடாசா விவாகரத்து ரூமர்ஸ்: விவாகரத்து பெற்று பிரிந்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார்?

By 
natasa

கிரிக்கெட் பிரபலங்களான வினோத் காம்ப்ளி, ஜவஹல் ஸ்ரீநாத், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் உள்ளிட்டோர் தங்களது மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு 2ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஒரு வார காலமாக வதந்தி பரவி வருகிறது. இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவிக்கவும் இல்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை.

இது ஒருபுறம் இருந்தாலும் இதற்கு முன்னதாக கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று பின்னர் 2ஆவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி விவாகரத்து பெற்று பிரிந்த டாப் 10 கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

தினேஷ் கார்த்திக் – நிகிதா வஞ்சாரா

சிறு வயது தோழியான தினேஷ் கார்த்திக் – நிகிதா வஞ்சாரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், முரளி விஜய் உடனான உறவு முறை காரணமாக கார்த்திக்கின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகலுடன் காதல் வயப்பட்டு 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஷிகர் தவான் – ஆஷா முகர்ஜி

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவர் தவான். கடந்த 2012 ஆம் ஆண்டு ஃபேஸ்முக் மூலமாக அறிமுகமான ஆஷா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அற்புதமாக இருந்த அவர்களது உறவு நாளடைவில் கசக்க தொடங்கியது. இதையடுத்து ஆஷா தனது மகன் ஜோராவரை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்றுவிட்டார். மகனை பார்க்க முடியாமல் மன உளைச்சலுக்கு வழிவகுத்தது. ஷிகர் தவானுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

முகமது ஷமி – ஹசீன் ஜஹான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினாலும், தனிப்பட்ட வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவி ஹசீன் ஜஹானை பிரிந்த ஷமி, அவரால் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். ஜஹான் கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் ஷமி மறுத்து வந்தார்.

வினோத் காம்ப்ளி – நோயெல்லா லீவிஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளியின் திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை கொண்டதாக இருந்துள்ளது. குழந்தைப் பருவ தோழியான நோயெல்லா லீவிஸை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வாழ்க்கை 2005ல் முடிவுக்கு வந்தது. பின்னர் மாடல் அழகியான ஆண்ட்ரியா ஹெவிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முகமது அசாருதீன் – நவ்ரீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் முதலில் நவ்ரீன் என்பவரை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பின்னர், பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்து கொண்டார். 14 ஆண்டு வாழ்க்கைக்கு பிறகு இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

ரவி சாஸ்திரி – அம்ரிதா சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 1980 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை அம்ரிதா சிங் உடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால், இறுதியில் அவர்கள் பிரிந்தனர். பின்னர் மருத்துவரும், நடன கலைஞருமான ரிது சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 22 ஆண்டுகளுக்கு பிறகு 2012ல் முறிந்தது. இதையடுத்து ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் உடன் தொடர்பு இருப்பதாக வதந்தி பரவியது. இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.

மனோஜ் பிரபாகர் முதலில் தனது முதல் மனைவி சந்தியாவை விவாகரத்து செய்து பின்னர் நடிகை ஃபர்கீனை திருமணம் செய்து கொண்டார்.

யோகராஜ் சிங்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங். இவரது தனது முதல் மனைவி ஷப்னத்தை விவாகரத்து செய்தார். பின்னர் 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜவஹல் ஸ்ரீநாத் தனது முதல் மனைவி ஜோத்ஸனாவை விவாகரத்து செய்துவிட்டு பத்திரிக்கையாளர் மாதவி பத்ராவலியை திருமணம் செய்தார்.

Share this story