ஹர்திக் பாண்ட்யா – நடாசா உறவில் விரிசல்.? பாண்ட்யா தொடர்பான இன்ஸ்டாகிராம் போட்டோஸ் நீக்கம்..

By 
nadasa

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த நிலையில் ஹான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவிற்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் முதலில் குழந்தை பெற்றுக் கொண்டனர். ஜூலை 30 ஆம் தேதி இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் பிறந்தான்.

மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். உதய்பூரில்  வைத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா திருமணம் நடந்துள்ளது. அப்போது நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா காரணமாக லாக்வுடன் போடப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் இவர்களது திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

உதய்பூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில், மெஹந்தி, சங்கீதா நிகழ்ச்சியும், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவும் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதகாவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி வருகிறது.

இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்று பெயர் வைத்திருந்த நிலையில், தற்போது பாண்டியாவை நீக்கிவிட்டு வெறும் நடாசா ஸ்டான்கோவிச் என்று மாற்றியுள்ளார்.

மேலும், நடாசாவின் பிறந்தநாள் மார்ச் 4, அன்று ஹர்திக் பாண்டியா எந்த பதிவையும் பதிவிடவில்லை. அதோடு, ஹர்திக் பாண்டியா தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நடாசா நீக்கியுள்ளார். இதில், அகஸ்தியா ஹர்திக் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் அவர் நீக்கியுள்ளார்.

அதோடு, ஐபிஎல் தொடர்பாகவும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தொடர்பாகவும் கடந்த 2 மாதங்களில் எந்த புகைப்படங்களையும் அவர் பதிவிடவில்லை. இது போன்று பல காரணங்களால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும் வதந்தி பரவி வருகிறது.

Share this story