கிரிக்கெட் வரலாறு : சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட்கோலி..

By 
rdrd5

இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இது தனி வீரராக கோலிக்கு 59 ஆவது டெஸ்ட் வெற்றியாகும்.

இதன் மூலம் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிக டெஸ்ட் வெற்றிகளை ருசித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கோலி. 

சச்சின் 200 போட்டிகளில் வென்று 72 டெஸ்ட் வெற்றிகளில் பங்கெடுத்துள்ளார். கோலி 113 போட்டிகளில் விளையாடி 59 டெஸ்ட் போட்டி வெற்றிகளில் பங்கெடுத்துள்ளார்.

கோலிக்கு அடுத்த இடத்தில் புஜாரா 58 வெற்றிகளோடும்,  டிராவிட் 56 வெற்றிகளோடும் அஸ்வின் 55 வெற்றிகளோடும் உள்ளனர்.

Share this story