ஹாக்கி தர்பார் : ஜப்பானை வீழ்த்தி, இந்தியா ஹாட்ரிக் வெற்றி; கள விவரம்..

By 
Hockey Durbar India beat Japan by a hat-trick; Domain Details ..

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில், தென் கொரியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. 

அதற்கு அடுத்த ஆட்டத்தில், வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 9-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

அதிரடி ஆட்டம் :

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஜப்பானுடன் மோதியது. 

போட்டி தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியிலும் இந்தியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதலிடம் :

இறுதியில், இந்தியா 6-0 என்ற கணக்கில் ஜப்பானை பந்தாடி அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்தியா பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

இந்தியா 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
*

Share this story